பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. தன் ஆட்டக்காரர்கள் யாவரும் தயாராக இல்லாத நிலையில் சர்விஸ் போட்டு, எதிராட்டக்காரர் உடனே திருப்பி அனுப்பிவிடுகிற ஆட்டத்தை எடுத் தாட முடியாமல் தன் குழு போய்விட்டால், அது (தவறான) தோல்விக்கே செலுத்திக்கொண்டு போய்விடும். ஆகவே, தயார்தானா என்பதைப் பார்த்துக் கொண்டு சர்விஸ் போடுவது நல்ல பழக்கமாகும்.

9. ஒவ்வொரு ஆட்டக்காரரும், எதிராட்டக்காரர் போடுகின்ற சர்விசுக்கு ஏற்ப, தாங்கள் நிற்கும் இடத்தை (அனுசரித்து) மாற்றி அமைத்து நின்று ஆடுவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும். அந்த சர்விஸ் எடுக்கப்பட முடியாத அளவுக்கு, தாங்கள் முயன்றும் எட்டாத இடத்தில் விழுவது போல், ஆட்டக்காரர்கள் தங்களுக்குள் இடைவெளி விட்டு நிற்கக்கூடாது. ஆட்ட நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து ஆட வேண்டும்.

10. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குத்தான் பந்து வருகிறது என்பதாக நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு வினாடியும் ஆடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

தன்னை நோக்கிப் பந்து வரவில்லையென்றாலும், தனது பாங்கர் அந்தப் பந்தை எடுத்தாட முனையாமல் தவறிப் போகின்ற நேரத்தில் அதனை தான் எடுத்து அனுப்பக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படலாம். ஆகவே, எப்பொழுதும் பந்தெடுத்து ஆடக்கூடிய தயார்நிலையில் (Steady) இருப்பது நல்லது.

11. இருக்கின்ற ஆட்டக்காரர்களில் சுமாராக ஆடக்கூடியவர்களை வலப்புற ஆடுகளப் பகுதியில்