பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

15. எந்தப் பந்தை யார் ஆடவேண்டும் என்பதை தேர்ச்சியுள்ள ஒரு ஆட்டக்காரராவது அல்லது மைய ஆட்டக்காரராவது அடிக்கடி குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது போலவே, ஆடு களத்தை விட்டு வெளியே போகின்ற பந்திற்கும் கவனக்குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுபோலவே, ஆடுகளத்தை விட்டு வெளியே போகின்ற பந்திற்கும் கவனக் குரல் கொடுத்துக் கொண்டு ஆடச்செய்ய வேண்டும்.

இவ்வாறு ஐந்து ஆட்டக்காரர்கள் ஆடுகின்ற சேர்ந்து விளையாடும் ஆட்ட முறைபினைப் பற்றி தெரிந்து கொண்டோம். இனி, ஓற்றையர் ஆட்டத்தில் (Singles) தனி ஒருவர் எவ்வாறு ஆடவேண்டும்; இரட்டையர் ஆட்டத்தில் (Doubles) இருவர் சேர்ந்து எவ்வாறு கூடி ஆடவேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் பின்வரும் பகுதியில் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆடுகின்ற முறையில் மாற்று வழி கொண்டு ஆடினால் தான், ஆட்டம் சோபிக்கும். சிறப்பாகவும் ஆட வாய்ப்பிருக்கும்.