பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன சர்விஸ் என்று பேசி, சர்விசைப் பொருட்டுத்தாமல் ஆடுகின்றவர் இழைக்கின்ற தவறு எப்படி மன்னிக்க முடியாததோ, அதே போல, சர்விசை கடுமையாகப் போடப் போகிறேன் என்று, தவறுகள் இழைப்பதுமாகும்.

அதனால், நன்றாக சர்விஸ் போடவேண்டுமென்றால், என்ன செய்யலாம்? என்று கேட்கத் தோன்றுகின்ற நல்லவா!

1. சர்விஸ் போடும்போது, எதிராட்டக்காரர் அல்லது எதிராட்டக்காரர்கள் தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்தே எடுத்தாடுவதுபோல போடாமல், அவர்கள் தங்களது இடத்தைவிட்டு நகர்ந்து சென்று எடுத்தாடுவது போலவே போட வேண்டும்.

2. அவ்வாறு எடுக்கும்போதுகூட, வலிமையாக எடுத்தாடிவிட முடியாமல், அனுப்பிவிட்டால் போதுமானது என்ற அளவில் அவர்கள் நிலைமை ஆவதுபோல, இடம் பார்த்துப் போட வேண்டும்.

3. வலைக்கருகில் பந்து மெதுவாக விழுவதுபோல போடும் சர்விஸ் (Low Service), எப்பொழுதும் பயன்தருவதில்லை. எப்பொழுதோ ஒரு முறை பயன் தரும் என்பதால், அதையே விடாப்பிடியாக கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, சர்விஸ் போடுவது நல்ல முறையல்ல. ஆகவே, இந்த சர்விஸ் முறையை அடிக்கடி போடாமல் தவிர்த்து ஆடவும்.

4. நடு ஆடுகளத்திற்குப் போவதுபோல சர்விஸ் போடுவது, சர்விஸ் போடும் குழுவை சங்கடத்திற்-