பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலையைக் குலைக்கின்றதாகவும், இவருக்குப் பாதுகாப்பான ஆட்டமாகவும் பெரிதும் துணை தருகின்றது.

3. இவ்வாறு உயர்த்தி ஆடுவதை, தலைக்கு மேலாக வரும் பந்திலும் (overhead) ஆடலாம். அல்லது இடுப்புக்குக் கீழாக வரும் பந்தையும் எடுத்துக் தள்ளி உயர்த்தி ஆடலாம்.

4. எதிராட்டக்காரரால் பந்து வேகமாக அடித்து அனுப்பப்பட்டால், அதை மெதுவாக எடுத்துத் தள்ளி ஆடினாலே (Gentle Push) போதுமானதாகிவிடும். அதற்காக வலிமையாகத் தேக்கி ஆடினாலும், அல்லது தூக்கி ஆடினாலும், அது ஆடுகளத்திற்கு வெளியே போய்விடும். அதனால், வலிமையாக வருகிற பந்திற்கு சுமாரான சக்தியைப் பயன்படுத்தி ஆடினால் போதும்.

5. எதிராட்டக்காரரிடமிருந்து மெதுவாக பந்து வந்தால் எவ்வாறு உயர்த்தி ஆடுவது என்ற சந்தேகம் எழுவது இயற்கை தான். அவ்வாறு மெதுவாக வருகின்ற பந்துக்கு கொஞ்சம் வேகம் கூட்டிட, வலிமையுடன் தள்ளியே அனுப்பிவிட வேண்டும். ஒரு ஆட்டக்காரர் பந்து தன்னிடம் வரும்போதே, அதன் வேகத்தினை ஓரளவு கணித்துக் கொண்டே ஆடுவது என்பது நல்ல பயிற்சியின் மூலமாகக் கிடைத்துவிடும்.

6. பயிற்சி நேரங்களில் முன்கைப்புறத்தாலும், புறங்கை புறத்தாலும் (Back Hand) பந்தை பல்வேறு உயரங்களில் உயர்த்தி ஆடிடப் பழகிக் கொள்ள குழு முன்னாட்டக்காரர்களின் கைக்கு எட்டாமல் அவர்களைத் தவிர்த்து ஒதுக்கி ஆடிடவும் பழகிக் கொள்ள வேண்டும்.