பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. பந்தை உயர்த்தித் தள்ளி ஆடும்பொழுது, ஒரு சில சிறந்த ஆட்டக்காரர்கள் அதில் சுழற்சி தரும் வண்ணம் சுற்றி (Twist , அனுப்பிவிடுகிறார்கள். அந்தப் பந்தானது, ஒரு திசைப்பக்கமாக உயர்ந்து போய், கீழிறங்கி வரும்பொழுது, மற்றொரு திசையாக சுற்றிக் கொண்டு வர, அதைப் பின்பற்றியே போகும் எதிராட்டக்காரர்கள் சில சமயங்களில் ஏமாந்து போய் விடுவதும் உண்டு.

இது சிறந்த ஆட்டம் என்றாலும், சிறப்பான பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும் திறனாகும்.

ஆகவே, உயர்த்தி ஆடும் உன்னதத் திறமையை, நல்ல திறன் என்ற நினைவுடன் வளர்த்துக் கொண்டிட வேண்டும்.

3. தள்ளி ஆடல் (Push)

தள்ளி ஆடும் ஆட்டத் திறனானது, அடித்தாடும் ஆட்டத் திறனுக்கும், எடுத்தாடும் ஆட்டத்திறனுக்கும் இடைப்பட்ட ஓர் ஆட்டத் திறனாகும். அதாவது, இப்படி ஆடுவதைப் பார்க்கும் பொழுது, இது அடித்தாடுவதுபோல இல்லாமலும், எடுத்தாடுவது போல இல்லாமலும், பாதி அடிப்பதுபோலவும், பாதி தள்ளுவது போலவும் தோன்றுகிற ஓர் ஆட்ட அமைப்பாகும்.

பூப்பந்தாட்டத்தைக் கற்றுக் கொண்டு ஆடத் தொடங்குகின்ற புதிய ஆட்டக்காரர்கள் அனைவரும் இந்த ஆடும் முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும். பழகப்பழக முன்னர் கூறியுள்ள, பின்னே கூறப் போகின்ற திறன்களில் கவனம் செலுத்தித் தேர்ச்சி