பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

பெற்றுவிடவும் வேண்டும். அஃதில்லாமல், ஆரம்பிக்கின்ற புதிய, முதல் நிலையான ஆடும் முறையையே சதம் என்று எண்ணி, அடைக்கலம் புகுந்து அதுபோலவே ஆடிக்கொண்டிருக்கக்கூடாது.

இவ்வாறு தள்ளி ஆடுகின்ற ஆட்ட முறைக்கு, பொறுமை, இடைவிடா சகிப்புத் தன்மை, பந்தை செலுத்தும் திசையை நினைத்துக் கொண்டு அந்தத் திசைக்கே அனுப்புகிற ஆற்றல் எல்லாம் மிகமிக அவசியமாகும்.

இந்த ஆடும் முறையில், பந்தை அடிக்கக்கூடாது. கொஞ்சம் வலிமையுடன் பந்தை அழுத்தித் தள்ள வேண்டும். அதுவும் தனிப்பட்ட இடத்தை நோக்கி வலையிலிருந்து இறங்குவதுபோல, மேலிருந்து கீழாகத் தள்ளி அனுப்பிட வேண்டும். அதுவும், எதிராட்டக்காரர்கள் இல்லாத இடமாகப் பார்த்துத் தள்ளவும் வேண்டும்.

ஆர்ப்பாட்டமாக அடித்து ஆடுவதை நம்புவதை விட அடிக்கடி தவறு நேர்ந்து விடுகிற பொழுதிது. அதிர்ஷ்டம் நமக்கு இன்று இல்லை என்று சலித்துக் கொள்கிறவர்களுக்கு மாற்று மருந்துபோல, நினைத்ததை சாதிக்கும் சக்தியை அளிக்கிறது இந்தத் தள்ளி ஆடும் முறை.

4. இடம் பார்த்துப் போடல் (Drop)

ஆடிக்கொண்டிருக்கும்பொழுதே ஆட்ட நேரத்தில், வலையோரமாக எதிர்க் குழு பகுதிக்குள் வந்து பந்து மெதுவாக விழுவது போல ஆடுவதானது பார்க்க அழகாக இருக்கும்.