பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

ஆட்டக்காரர்களும் பின்பற்றி ஆடுகிறார்கள் என்றாலும் அந்தந்த ஆட்டக்காரரின் ஆடும் சிறப்பாற்றலைப் பொறுத்தே, இந்த ஆட்டத்திறன் வேறுப்பட்டுத் தெரியும்.

நேராக எதிராட்டக்காரர்களது ஆடுகளப் பகுதியில் இடம் பார்த்து பந்தை முழு வலிமையாக அடித்து அனுப்புவதுதான் இந்த ஆடு முறையாகும். நடு ஆடுகளத்தில் இருந்தேனும், அல்லது சற்று வலைக்குத் தள்ளி இருந்தபோதிலும் பந்தை வலிமையாக அடித்து அனுப்பிவிட முடியும்.

ஒரு சில ஆட்டக்காரர்கள் நின்றவாறே பந்தை அடிப்பார்கள். வேறு சிலர் உயரே தாவிக் (கைப்பந்தாட்டத்தில் ஆடுவது போல) குதித்து பந்தை வலிமையுடன் அடிப்பதும் உண்டு. இவ்வாறு தாவி அடிப்பது சற்று கூடுதலான பயனையும் அளித்திடும்.

இந்த ஆடும் திறனைக் கற்றுக்கொள்ளும் போது, நல்ல ஆட்டக்காரர் ஒருவரை எதிர் ஆடுகளத்தில் நிற்கச் செய்து, அவர் பந்தை தேவையான உயரத்திற்கு உயர்த்தி அனுப்புமாறு கூறி, மறுபக்கத்திலிருந்து பலமுறை அடித்தாடிப் பழகினால், இதில் எளிதில் தேர்ச்சி பெறலாம்,

அரை அடித் தாக்குதல் (Half Shot)

முன் பகுதியில் கூறியது போல், பந்தை வலிமையாக அடித்து அனுப்பாமல், மெதுவாக அடித்து அனுப்புவது. அதாவது வேகமாக பந்து வரும் என்று எதிராட்டக்காரர் நினைத்து ஆடத் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, வேகமற்றதாக பந்து போய், அவர்