பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

முன்னே விழுமாறு அடித்தாடுவதையே, அரை அடித் தாக்குதல் என்கிறோம்.

எதிராளியை ஏமாற்றி ஆடுவதற்காக, வேகமாக அடிப்பது போன்ற பாவனை காட்டி, மெதுவாக அடித்தாடலாம். அது இரட்டையர் அல்லது ஒற்றையர் ஆட்டத்தில் மிகவும் பிரயோசனமுள்ள ஆடும் திறனாக அமைந்திருக்கிறது. இதை தன்னம்பிக்கையுடன் சரியான குறி வைத்து ஆடவேண்டும். இல்லையேல், எதிராளிக்குப் பந்து எளிதாக முன்புறமாகவே கிடைத்துவிட, அவர் அடித்து முடித்து வெற்றி எண் பெற்றுவிடுவார்.

7. சுழலடி : (Twist)

அடிபட்டுப் போகின்ற பந்து, நேராகப் போகாமல், சுழற்சியுடன் சென்று திசைமாறிப் பயணம் செய்யுமாறு அடிப்பதையே சுழலடி என்கிறோம்.

இது சில சமயங்களில் வேகமாகவும் வரும். சில சமயங்களில் மெதுவாகவும் செல்லும். மெதுவாக சுழன்று வரும் பந்தையேனும், தயாராக இருந்து தன்னம்பிக்கையுடன் ஆடினால், தவறின்றி ஆடி விடலாம். வேகமாக சுழன்று வரும் பந்தை மிகவம் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் ஆடவேண்டும்.

சுழலடியால் வருகிற பந்தானது, ஆடுகள பகுதியின் ஒருபுறமிருந்து வரத்தொடங்கி, மறுபகுதியில் தான் போய் விழும். அது, பக்கக்கோடுகளுக்கு வெளியே போய், அங்கிருந்து உட்புறமாக, சுற்றிக்கொண்டே வந்து விழலாம். அல்லது ஒரு பக்கமாகக் கோட்டுக்கு அருகில் போய்கூட விழலாம் ஆகவே, மிகவும் நிதானத்துடன் ஆடவேண்டும்.