பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

மெதுவாகவோ, சற்று அதிகமாகவோ காற்று வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அது போன்ற கழலடி ஆட்டம் சிறப்பாக அமையும். வருகிற பந்தை நோக்கிப் பந்தடி மட்டையின் (வட்டப் பரப்பை) முகத்தைக் கொண்டு சென்று, பந்துக்கு குறுக்காக வெட்டுவது போல, செதுக்கி அடித்து அனுப்புவதைத் தான், சுழலடியில் செய்கின்றார்கள். அவ்வாறு அனுப்பும்போது, பந்தைத் தள்ளுவதுடன், பந்தைச் சுழலும்படி செய்தும் அனுப்புகின்றார்கள்.

பந்தைத் தலைப்பாகத்தில் அடித்து, வலைக்கு மறுபுறம் நேராக இறங்கி விழுமாறு அடித்தாடும் ஓர் முறையும் உண்டு .

வலது கையால் வலிமையாக அடிப்பதுபோலவே, இடது கையாலும் அடிப்பவர்கள் சிலர் உண்டு. இது சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய திறமையாகும். அவர்கள் இடது கையிலும் வலது கையிலும் பந்தாடும் மட்டையை மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் ஆடுவது அபூர்வமான காட்சியாகும்.

மேலே கூறிய திறன்களை மிகவும் நுணுக்கமாகவும் நுட்பமாகவும் தெள்ளத் தெரிந்து விளங்கிக் கொண்டு, விரும்பி, நல்ல முயற்சியுடன் ஆடிப்பழகிக் கொண்டால், சிறப்புற தேர்ந்திட முடியும். முயற்சி புடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி.

சிறப்புறும் திறமையிலே உயர்ந்தோங்கிட உங்கள் பயிற்சி உதவும் என்பதால் உண்மை பயிற்சியைப் போல உற்ற நண்பன் உலகிலே இல்லை என்ற உறுதிடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்!