பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டையர் ஆட்டம் (Doubles)


ஒரு குழுவிற்கு இரண்டு ஆட்டக்காரர்கள் இருந்து ஆடுவது இரட்டையர் ஆட்டமாகும். அதற்குரிய ஆடு நீளமானது, ஐவர் ஆட்டத்திற்குரிய அளவில் சரிபாதியாகும. அதாவது 80 அடி நீளம் 40 அடி அகலம் ஐவர் ஆட்டத்திற்குரிய்தென்றல், இரட்டையர் ஆட்டத்திற் குரிய ஆடுகளத்தின் அளவானது 80 அடி நீளம் 20 அடி அகலமாகும்.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள இருவரில், ஒருவர் முன்னாட்டக்காரராகவும், மற்ருெருவர் பின்னுட்டக்காரராகவும் இருந்து விளையாடுவார்கள். இருவராக இருப்பதனால், சேர்ந்து ஆடக்கூடிய சூழ்நிலை அமைந்திருந்தாலும், சிறப்பாக தனியாளாக இருந்து ஆடக்கூடிய அளவில்தான். இந்த இரட்டையர் ஆட்டத்தின் அமைப்பும் இருக்கிறது. இணைந்தாடுவது தேவைதான் என்ருலும், ஒரு ஆட்டக்காரரின் சிறப்பான ஆட்டத்திற்கும் இதில் வாய்ப்பும் வசதியும் இருக்கிறது.

இனி, இரட்டையர்கள் எவ்வாறு ஆடவேண்டும் எனற ஆட்ட முறைகளையும் இங்கு காண்போம்.