பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


டக்காரர் எளிதாக அடித்து முடித்து விடுவார் என்பதையும் முன்னோட்டக்காரர் மறந்துவிடவே கூடாது.

அதனால், அவர் சர்வில் போடும்போது, ஆடுகளத்தின் வலப்புற அல்லது இடப்புறப் பகுதி மூலையில் (Corner) போய் விழுவதுபோல ஆடுவதுதான், பாதுகாப்பான ஆடும் முறையாகும்.

6. சில சமயங்களில், முன்னாட்டக்காரர் ஏமர்ந்திருப்பதை பார்த்துக்கொண்டு, வலையோரமாக அவர் எடுக்க முடியாத வண்ணம் சர்விஸ் போட்டுவிடவும் வேண்டும்: அப்படி எடுத்தாலும், அது சர்விஸ் போடும் முன்னாட்டக்காரருக்கே வகையாக அடிப்பது போல்தான் எடுத்தாடுவதாக அமையும். அவரையும் மீறி கொஞ்சம் பின்னல் போனல், பின்னாட்டக்காரர் வலிமையாக அடித்தாடவும் வாய்ப்பினைத் தந்திடும்.

7. பந்தை சுழற்றிப் போடும் சர்விஸ் (Twist) முறையை எப்பொழுதும் பயன்படுத்தலாம். ஆனால், நடு ஆடுகளத்திற்குப் போகாமல், கோடுகளுக்கருகே போவதுபோல் போடுவதுதான் நல்ல பயனைத் தரும். எதிராளிகளாலும் எளிதாக ஆட முடியாமல் போகும். சர்விஸ் போடுபவருக்கும், தொடர்ந்து வெற்றி எண்னும் கிடைத்து வரும்.

அடுத்து, பின்னாட்டக்காரர் ஆடவேண்டிய முறைகளைக் காண்போம்.

பின்னாட்டக்காரர்(Back Player)

பின்னாட்டக்காரர்தான், இரட்டையர் ஆட்டம் ஆடுகின்ற குழுவின் முதுகெலும்பு போன்றவராக