பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


முக்கியமான இடத்தை வகிக்கின்றார். ஆட்டத்தின் முழுச் சுமையையும் தன்மேல் ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக செய்துமுடிக்கும் பெரும் பொறுப்பை வைத்துக் கொள்கின்றார்.

ஆடுகளத்தின் நீளமானது 40அடி துாரம் என்றால், முன்னாட்டக்காரர் வலையிலிருந்து ஏறத்தாழ 12 அடி தூரம்தான் பின்னால் வந்து ஆடலாம் என்று முன்னரே கூறியுள்ளோம். மீதியுள்ள 8 அடி துாரத்தில் அடங்கிய இடப்பரப்பு முழுவதையும், பின்னாட்டக் காரரே காத்திருந்து ஆடுகின்றார் என்றால், அவரது பொறுப்பின் மிகுதியை நீங்களும் புரிந்துகொள்ளலாம் அல்லவா!

அவ்வாறு காத்துக்கொண்டு ஆடும்பொழுது எடுத்தாடுகின்ற பந்தை எதிராளிகள் எளிதாக எடுத்து அடித்து முடிப்பதுபோல் ஆடிவிடக் கூடாது என்பதில் பின்னட்டக்காரர் கண்ணுங் கருத்துமாக இருந்து விளையாட வேண்டும்.

அதற்காக, அவர் தான் அனுப்புகின்ற பந்தையெல்லாம் கடைக் கோட்டருகில் (Base Line) அல்லது அதன் இருபுறமும் இருக்கின்ற மூலைப் பகுதியைப் பார்த்து உயர்த்தி ஆடவேண்டும்(Lob).அல்லது அடித்தாட நேர்ந்தால் எதிர்க்குழு முன்னாட்டக்காரர் கைக்கு எட்டாமல் அல்லது கிடைக்காதவாறு அடித்தாட வேண்டும்.

மேலே உயர்த்திப் பந்தை ஆடும்போது, கடைக் கோட்டருகிலே போய் பந்து விழும் இடத்தைக் குறித்துக் காண்பித்திருக்கிறோம். அதுபோலவே, அடித்தாடுகின்ற நேரத்தில், முன்னாட்டக்காரருக்கும் எட்டாத