பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


1. கடைக் கோட்டருகில் உள்ள இடப்புறம் அல்லது வலப்புறம் இருக்கும் மூலைப் பகுதிகளுக்கு பந்தை உயர்த்தி ஆட(Lob)வேண்டும்.

2. அடித்தாடும்போது பக்கக் கோடுகளுக்குப் Side Lines) பக்கமாக பந்து போவது போல, அதிலும் குறிப்பாக, முன்னாட்டக்காரர் காத்து நிற்பதற்கு அடுத்த பகுதி நோக்கிப் போகுமாறு பந்தை அடிக்க வேண்டும்.

3. பந்தை சுழல விட்டு (Twist or Screw) அனுப்பும்பொழுது கூட, முன்னாட்டக்காரர் ஆடுவதற்கு முயன்றாலும் எட்டாமல் இருக்கின்ற தூரத்தில் தான் பந்தை அனுப்ப வேண்டும்.

4. அரை அடி (Half Shot) என்பார்களே, அதுபோல பாவனை செய்து, தந்திரமாக அரையடி அடித்து, எதிர்க்குழு பகுதியில் இடம் பார்த்துப் போட (Drop) வேண்டும்.

இவ்வளவு துாரம் பொறுப்பேற்று, கஷ்டப்பட்டு ஆடினாலுங்கூட அதிகமான வெற்றி எண்களை பின்னாட்டக்காரரால் பெற்றுவிட முடியாது. அவர் அதிகமாக ஆடி, தன் முன்னாட்டக்காரருக்கு எளிதாக அடித்து முடிப்பதற்கேற்ற வாய்ப்பினை உண்டாக்கித் தருகிறார். தரவும் முயல்கிறார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முன்னாட்டக்காரரே வலிமையாக அடித்து முடித்து வெற்றி எண்களைப் பெற்றுத் தருகிறார்.

இவ்வாறு இரட்டையர் ஆட்டத்தில், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து ஆடி வெற்றி பெறுகின்ற விதங்களையும், அவர்கள் ஆடுகின்ற முறைகளையும் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, ஒற்றையர்