பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


ஆட்டத்தில் ஆடும் ஆட்டக்காரரின் பொறுப்பான ஆட்டம் பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வோம்.

2. ஒற்றையர் ஆட்டம் (Singles)


ஒற்றையர் ஆட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும் ஆங்காங்கே ஆர்வமுள்ள விளையாட்டு விரும்பிகளால் ஒற்றையர் போட்டி நடத்தப்படுகிறது. அவ்வாறு தனித்தனியே, அவரவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடத்தப்படுவதால், ஆடுகளம் பற்றிய அளவு வருகிற பொழுது, வித்தியாசப்படுவது இயல்புதானே!

பல போட்டிகளில், பல்வேறு விதமான ஆடுகள அமைப்புக்கள் இருக்கின்றன. அவை. ஆட்டக்காரர்கள் ஆடும் சக்திக்கும், ஆட்டத் திறமைக்கும் ஏற்றார் போலவே வித்தியாசப்படுகின்றன.

ஒருவர் நின்று ஆடுகின்ற ஆடுகளப் பகுதியின் (Court) நீள அகலமானது 40 அடி x 20 அடியாகும். அகலம் 20 அடி. அது ஒரே அளவுதான். நீளம்தான் நிலைமைக்கேற்ப வேறுபட்டிருக்கிறது. அது 40 அடி. துாரத்தில் வலைக்கோட்டிலிருந்து 13 அடி 4 அங்குலம்; 16 அடி; 20 அடி என்று துாரத்தைக் கணக்கிட்டு, அந்த அளவுக்குக் கோடு போட்டு, அதற்குள் ஆடுனகின்ற பந்து விழுந்தால், ஆடுகளத்திற்கு வெளியே (Out) விழுந்தது என்பதாக விதியமைத்துக் கொண்டிருக்கின்றர்கள்.

எந்தக் கோட்டின் மேல் பந்து விழுந்தாலும் அல்லது கோட்டைப் பந்து தொட்டாலும், அது ஆடுகளத்திற்கு வெளிய விழுந்ததாகவேகருதப்படும்(Out).