பக்கம்:பூமியின் புன்னகை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சட்டம்


‘நோ பார்க்கிங்’ ஏரியாவில் தைரியமாய்ப்
பாதையின் குறுக்கே பார்க்கிங்லைட் இல்லாமல்
தாறுமாறாய்த் தறிகெட்டு இருளில் நிற்கும் வேறு நாட்டுக்
காரை விரைந்து வந்து நம்பர் குறித்து

டிராஃபிக் ‘அஃபென்ஸ்’ என சார்ஜ்ஷீட்
எழுதிய காவலர்,ஓட்டி வந்தவர்
லா மினிஸ்டர் மாண்புமிகு சட்டநாதனின்
மகன் என அறிந்ததும் பயந்து பணிந்து

காருக்கும் மகனுக்கும் காலில் விழாதகுறையாய்ப்
பத்துத் தடவை சல்யூட் அடித்துப்பதறிப்
பாவமன்னிப்பும் பெற்று உய்ந்தார்
தெரியாத் தனமாய்ச் சிக்கலில் விழுந்தது

அறியாமை என்றே ஆதங்கப்பட்டுக்
கன்னத்தில் பலமாய்ப் போட்டுக் கொண்டே கைகளும்
கூப்பினார்
காரும் டிரைவரும் கண்களில் மறையும் வரை
அந்தத்திக்கு நோக்கித் தெண்டனுமிட்டார்.