பக்கம்:பூமியின் புன்னகை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

9


காவியக் காதலர்

சாவும் துயருமழியச்
சரிதம் புகழ் பேச

ஓவியக் கமலம்போல்
ஒளி வாடித் தேயாக்

காவியக் காதலிருவர்.

மோதிர விரல்

தீயினில் தளிர்த்ததோர்-பொற்
செழுங் கொழுந்தெனவே

மாயக் கை விரலாள்-அதில்
மன்மதன் சொக்கிடும்

கோல மோகனச் சிறு
மோதிர மொன்றுடையாள்.


மேனி


முகிலுமிருளும் கலந்துபின்
மூண்டுசரிந்த கருங்குழலாள்
 
துகிலும்பட்டும் புனைந்துபின்
தோன்றிவந்த பெண்மயிலாள்

குயிலும் தேனும் இணைந்துபின்
கூவிப் பதிந்த சொல்லிசையாள்

வெயிலும் ஒளியும் செம்பொனும்
வீதமாய்ச் சமைந்த மேனியினாள்.