பக்கம்:பூமியின் புன்னகை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

11


இக்கால மாப்பிளைக்கு நேரமெங்கே?
     இதமாக அருகமர்ந்து கொஞ்சுதற்குத்

தற்காலத் தலைத்தீ பாவளியில்
     சமயமேது வார்த்தையேது பிரியமேது

கற்பதித்த மோதிரந்தான் தராவிடிலோ
     கண்டனத்துக் காளாகும் மாமனார்கள்

சொற்பொருந்தப் பணிந்து கெஞ்சும்
     தொல்லைப் பழங்கால மாமனார்கள்.

இந்நாளில் மாமனாரோ 'இந்து'விலே
     எடுப்பாகத் தெரிகின்ற முதற்சேதி

பொன்னான வியட்நாமின் போர்களினாற்
     புகைகின்ற கனல்பற்றி வாதிப்பார்

எந்நாளும் விற்காத விலைக்குயர்ந்தே
     எண்ணெய்புளி விற்பதனை எடுத்துரைப்பார்

தம்நாளில் ரூபாய்க்குப் பதினாலுபடியரிசி
     தந்ததனைச் சொல்லி மகிழ்விப்பார்.

மோதிரமும் ரிஸ்ட்வாட்சும் வேண்டுமென்று
    முன்கோபப் படுகின்ற மாப்பிளையைக்

காதலினால் வசப்படுத்தப் பெண்மூலம்
     சதிசெய்யும் மாமனார்கள் பலருண்டு

ஆதரவாய்த் தன்செலவில் அவைசெய்து
     தாய்தந்தை ஏமாறத் தியாகம்செயும்

மேதகுநல் மாப்பிளைகள் பலருண்டு
     முன்னாள்போல் இந்நாளில் நடக்காது.