பக்கம்:பூமியின் புன்னகை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பூமியின் புன்னகை


இராக்கெட்டு விடுகின்ற நம்நாளில்
      இராக்கெட்டுத் தூக்கமின்றி இரயிலேறிப்

பாக்கெட்டு மணியெல்லாம் செலவுசெய்து
      பத்துநாட்கள் முன்னதாக வந்துசேர்ந்து

போக்கற்றுப் போகாத மாமனாரைப்
     பொழுதுக்கும் துயர்படுத்தாப் பெருந்தன்மை

வாக்குடையான் காதலுள்ளான் 1970 ரகம்
     வருங்கால மாமனார்கள் தொழுங்காலோன். •