பக்கம்:பூமியின் புன்னகை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூமியின் புன்னகை.pdf


• உச்சிவெயில் நடுப்பகலில் ஒருநாள்
       உடுப்பிஹோட்டல் அடுப்படியில் மணிக்கணக்காய்ப்

பச்சைவேர்வையில் குளித்துவந்து சர்வர்ப்
      பையன்கொடுத்த புதுப்பால் காபியருந்தி

எச்சரிக்கையாக மனத்தெண்ணித் தீர்மானித்தே
      இன்னொரு புதுக்கவிதை வகையாக

நிச்சயம் எழுதிடணும் என்றே
      நினைத்துத் திட்டம் வைத்திருந்தும்

ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை-அதனால்
     என்கவியை இன்னும் நான் படைக்கவில்லை.

ஆகாயம் பூமி கடல் என்றும்
      ஆதவன் சந்திரன் விண்மீன்என்றும்

ஆதாயம் பார்த்தன்றே கவிவாணர்
      அத்தனையும் பாடிவிட்டுப் போனபின்னர்