பக்கம்:பூமியின் புன்னகை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பூமியின் புன்னகைஓசியினில் உடற்சிகிச்சை மலர்மாலை
ஊரார் பணச்செலவில் பயணங்கள்

காசினியில் உள்ளதெலாம் அனுபவிக்கக்
கட்சிதரும் பணமென்னும் புதுப்பிச்சை

மோசடிக்கு மலர்க்கிரீடம் சுவரொட்டி
முதுகெல்லாம் புரள்கின்ற பொன்னாடை

காசடிக்கும் பம்மாத்து வேலைக்குக்
கட்சியெனும் திருவோடு கருவியாகும்.

மக்கள் பணச்செலவில் மாடிவீடு
மக்கள் பணச்செலவில் வாகனங்கள்

மக்கள் பணச்செலவில் சாப்பாடு
மக்கள் பணச்செலவில் பயணங்கள்

மக்கள் பணச்செல்வில் உபதேசம்
மக்கள் பணச்செலவில் நாற்காலி

எக்கணமும் எல்லாமும் ஊர்செலவில்
இதுவன்றோ பிச்சையினும் பெரும்பிச்சை?

சந்தியினில் தெருமுனையில் சாக்கடையில்
சத்திரத்து முன்றிலினில் தேரடியில்

வந்திருந்து துணிவிரித்துப் பிச்சையென்று
வருவோர்க்கும் போவோர்க்கும் சலாம்போடும்

நொந்தவர்போல் நோகாமல் நுடங்காமல்
‘நும்தலைவன் மந்திரி நான்' என நிமிர்ந்து

தந்தவர்தம் ஓட்டெல்லாம் தற்செருக்காய்த்
தருக்குமொரு புதுப்பிச்சை பொதுப்பிச்சை!