பக்கம்:பூமியின் புன்னகை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒரு தலைவரின்
அடுத்த பிறவி ஆசை


• உருப்படியாய்ச் சிலநல்ல செய்ய எண்ணி
ஊர்த் தெருவில் படியிறங்கி நடக்குமுன்னே

பொருப்பளவு தூக்கிவைத்துப் புகழ்ந்தென்னப்
பொறுப்பின்றிக் கைத்தட்டிப் பெயர் வளர்த்துக்

கருப்பூரம் மேலெடுத்து மாலையிட்டுக்
காசுகளால் மூடிவைத்துப் பதவியெனும்

விருப்பூறும் நாற்காலி தனிலமர்த்தி
வீணாக்கி மயங்கவைத்தீர் கெடுத்துவிட்டீர்!

தொண்டுசெய்யப் பழகுமுன்னே எனைய ழைத்துத்
தூணுயரச் சிலை வடித்துத் திறந்துவைத்தீர்

அண்டைவீட்டார் துயரங்கள் அறியுமுன்னே
‘அநாத ரட்சகா ஆபத்பாந்தவா’

பண்டறியாப் பெரும் புகழின் படைப்பாளா
பல்லோர்க்கும் உழைக்கின்ற பணியாளா

விண்டறியாச் சீருடையாய்’ என்றெல்லாம்
வீணாகப் புகழ வைத்தீர் கெடுத்துவிட்டீர்!