பக்கம்:பூமியின் புன்னகை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.நானொரு படம் பார்த்தேன்


வில்வெட்டுத் துணிதரித்த ஏழை
வேலையில்லாக் கதாநாயகன்

பல்வெட்டு முகவெட்டுப் பகல்வேஷப்
பவிஷொன்றும் குறையாமல்

சொல்வெட்டும் வசனங்கள் எல்லாம்
சொகுசாகப் பேசியங்கே

நல்வட்ட மதிமுகத்தில் நெஞ்சில்
நலிவோ வியர்வோ சிறிதுமின்றிக்

கைவண்டி இழுக்கின்றான் தன்னுடைய
கால்களிலே அழுக்கின்றிப்

பொய்வறுமை நடிக்கின்றான் முகத்தில்
புதுமெருகு தழைக்கின்றான் என

நானொருபடம் பார்த்தேன் பட்டி
நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்

நானொரு படம் பார்த்தேன்.

மூச்சுவிடுமுன்னே முன்னூறு பின்பாட்டு
முதுகும் தொப்பூழும் முன்தெரிய