பக்கம்:பூமியின் புன்னகை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பூமியின் புன்னகைவலைமான்போல் பெண்ணுக்குத் தந்தை
நாகரிக உலகத்தில் இறந்தவர்க்காய்

நான்குதினம் அழுகின்ற பட்டதாரிக் கதைத்தலைவி
தன்வயிற்றுச் சோற்றுக்கே தாளமிடும்

தனிவறுமைக் கதைத்தலைவன் அன்னவளை
என்னன்பே என்றழைக்கும் காதல்கள்

நானொரு படம் பார்த்தேன் பட்டி
நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
நானொரு படம் பார்த்தேன்.

படத்தில் பாதிகதையில்லை
பார்த்ததில் மீதியும் பொருளில்லை
மடத்தனம் என்றதோர் சொல்லுக்கே

மலிவாய்க் கிடைக்கும் உதாரணமாய்ப்
படத்துறை போனதைப் பார்க்குங்கால்

பதைக்கும் நெஞ்சொடு சொல்லிடுவேன்
வாழ்க்கையை மறந்த சொப்பனங்கள்

வாழ்க்கையைக் காட்டும் வழியாகா
காக்கை பிடிக்கும் சிலபுல்லர்

காசுகள் சேர்க்கும் பலமூடர்

கூட்டிக் கொடுக்கும் சிலதரகர்
கூடிக் கலைகளை ஆள்கின்றார்

ஏட்டில் எழுதா மடத்தனமாய்
நானொரு படம் பார்த்தேன் பட்டி