பக்கம்:பூமியின் புன்னகை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடித்துப் புடைத்து மேலேறி
இடறி விழாமல் நின்றபின்னர்

அடுத்த கணத்தில் இருபுறமும்
ஆளில்லா இருக்கை யேதும்

தடித்தவர்கள் தானமராப் பக்கத்திற்
சான்ஸாக இருக்கிறதா எனப்பார்த்துப்

படித்தவன்போல் இல்லாத குறைக்கங்கே
பார்த்தயரா நாசூக்கின் முகமலர்ந்து,

நின்றபடி யருகிலுள்ளார் மெயில்பேப்பர்
நியூஸுகளும் தலைநீட்டிப் படித்துவிட்டு

என்றனுக்குப் பின்னாலே யுராய்கின்ற
இங்கிதத்தாள் சேலைமுனைப் படையெடுப்பை

வென்றெடுத்து விலகிநின்று ஏர்பிரேக்கு
வீறிடவே குலுங்கிவிழும் பயணிகளில்