பக்கம்:பூமியின் புன்னகை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அதிகம் விற்கிற நியூஸ் பேப்பர்


• மந்திரியார் பிரசங்கம் மரத்தடியில் கற்பழிப்பு
மாதவிடாய் மாத்திரைக்கு மகத்தான விளம்பரங்கள்

சந்துமுனைக் குழாயடியின் பரபரப்புச் சமாச்சாரம்
சட்டசபை வாயடிகள் மைதானக் கையடிகள்

முந்தியநாள் பொதுக்கூட்ட முழக்கங்கள் அறைகூவல்
முட்டத்தூர் நடுத்தெருவில் பட்டினியால் ஒரு சாவு

எந்தவொரு மாநிலமோ புயல்வெள்ள நிலைமைகளால்
இடர்பட்டு அலைக்கழியும் வேதனைகள் நிவாரணங்கள்

மார்க்கெட்டு நிலவரங்கள் மன்மதனார் கைவைக்கும்
மங்கையர்கள் சிங்காரப் புகைப்படங்கள் 'பின்னப்'பில்

வார்க்கட்டின் சதைப்பிடிப்பில் மயக்குகின்ற வாசகர்கள்
வாடிக்கையான சினிமா காபரே வகையறாக்கள்

ஊர்ப்பட்ட பேரெல்லாம் வாசிக்கும் ராசிபலன்
ரேஸ்குதிரை ஹேஷ்யங்கள் லாட்டரியின் திடீர்க்குபேரர்

ஆர்ப்பாட்ட மாய்விற்கும் மிகப்பெரிய நியூஸ்பேப்பர்
அடையாளம் இவையாகும் மிகையில்லை பேருண்மை.
(டிசம்பர்-1971)