பக்கம்:பூமியின் புன்னகை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


•போரற்ற பெருவுலகங் காண வேண்டும்
பூமியெல்லாம் புதுமைநலங் கமழ வேண்டும்!

நீருற்ற முத்துக்கள் போலநல்ல கவிதைகளை
நிதமெனக்கு நீகொண்டு தரல்வேண்டும்.
 
பசியற்ற பாரொன்று படைத்திடல் வேண்டும்
பண்புநலம் பலவுமங்குச் செறிந்திடல்வேண்டும்.
 
வசியுற்ற மாந்தரெலாம் வசையற்ற பெரும்
வாய்மைப் புகழ்மிகவு மெய்திடல் வேண்டும்.

மெய்யாக இவைமேதினியில் நிகழ வேண்டும்
மீமிசை ஞாயிறு தலையாகப் பூமியாளும்
 
பொய்யான அரசருக்கோர் வார்த்தையினிப்
பூதலத்தைப் புதுமையுறப் புரந்திடல்வேண்டும்.

பயனற்ற சட்டங்களை ஒழித்திடுவீர்
பாரிற் புதுமைநலம் மிகக்காணும்