பக்கம்:பூமியின் புன்னகை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பூமியின் புன்னகை


நலனுற்ற முறைநூல்கள் செய்திடுவீர்
நன்மை யெலா முலகத்துடைமையெனச் செய்வீர்.

நாளும் நல்லவர்கள் திருக்கூட்டம்
நலிவற்று வளர நாட்டில்மக்கள்

வாழும் முறைமையினை அவரோடு கூடி
வகையாக அறிந்து சிறந்திடல்வேண்டும்.

எழிலாக வளர்ந்திளமைநலம் மிகப்பெற்று
எடுப்பாக நிற்குமிளங் கன்னி தருமின்பம்

பொழில் நடுவில் எத்தகைத்தோ வத்தகைய
புதுமையின்பந் தரு செஞ்சொற் கவிதை மிக

வேண்டும்