பக்கம்:பூமியின் புன்னகை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

•சேமநிதிபோல் மேலெழுந்து
திசையெல்லாம் அருள்காட்டும்
தெளிவான கோபுரங்கள்

நாமகள்போய்க் குடியிருக்க
நயக்கின்ற தமிழ்ச்சங்கம்
நான்காம் புகழ்ச்சங்கம்.

பாமரரும் முனைமுறியாத்
தமிழ்பேசிப் பழகிவிட்ட
பண்பாட்டுப் பழக்கத்தால்

தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவுவதற்குத்
தலைநகரம் மதுரையாகும் !

பிட்டுக்கு மண்சுமந்த
பெருமானின் பரம்பரைபோல்
இன்றெமது தெருவெல்லாம்