பக்கம்:பூமியின் புன்னகை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பூமியின் புன்னகை

ஜன்மத்துக் குயர்வளிக்கும் பெருமைமிகு
தமிழ் மதுரைப் பகுதியாகும் தகுதியாகும்.

பொதியமலைப் பிறந்தாலும் கூடல்நகர்ப்
புதுமையினில் நுழைந்துயர்ந்த தமிழ்த்தென்றல்

நதியருகே மாரியம்மன் குளத்தருகே
நடைபோடும் பெருமையினால் சிறந்திருக்கும்.

மதிமயங்கிச் சொக்கவைக்கும் மல்லிகைப்பூ
மதுரமணி எம்மெஸ்ஸின் சங்கீதம்

முதிய புகழ்க் கொடைக்கானற் குறிஞ்சிமலர்
முற்றும் இவை எல்லாம் மதுரையாகும் !