பக்கம்:பூமியின் புன்னகை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்னும் எதைத் தேடுகின்றேன்?


பச்சை மண்ணாய்ப்
பாலகனாக இருக்கையில் நான்
கச்சினைத் தேடிக்
கைகளால் வருடிப்

பசித்தே யழுதேன்
பாலினை உண்டேன்
நிசியினில் அயரநான்
நீந்தும் வயதினில்

தொட்டிலைத் தேடினேன்
தூங்கி அயர்ந்தேன்
பட்டினில் மெத்தையில்
பாடல்கள் கேட்டுக்

கண்களை முடினேன்
கனவுகள் தேடினேன்
பெண்கள் கொஞ்சிடப்
பிள்ளையாய் ஆடினேன்.