பக்கம்:பூமியின் புன்னகை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை'பூமியின் புன்னகை' என்னும் இக் கவிதைத் தொகுதி என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பாக இப்போது வெளிவருகிறது. முன்பு வெளியான கவிதைகள் - 'மணிவண்ணன் கவிதைகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. அவை பெரும்பாலும் அழகியல் கவிதைகள், இயற்கை வருணனைப் பாடல்கள் மட்டுமே. 1969க்குப் பின்னர் தீபம் இதழில் 'செங்குளம் வீரசிங்கக் கவிராயர்' என்ற பெயரில் நான் எழுதிய கவிதைகள் பல இப்போது இப்புத்தகத்தில் வருகின்றன. வேறு சில சமகாலக் கவிதைகளும் இணைகின்றன.

இங்கே இது என் பார்வையில் சற்றே வேறு வகையான கவிதைத் தொகுதியாகும். மரபும், நவீனமும் இணைந்த பழமையும் புதுமையும் இணைந்த கவிதைகள் இதில் அதிகமுள்ளன. இயற்கை அழகு வருணனைப் பகுதியும் கொஞ்சம் உண்டு. சமூகம், அரசியல், பொதுவாழ்வின் பிரச்சினைகள் பற்றிக் குத்திக் காட்டும் கவிதைகளை இதில் நீங்கள் சற்றே அதிகமாகக் காணமுடியும். இதை என் வளர்ச்சி மாறுதல்-அல்லது-தேறிய போக்கு-எப்படி' நீங்கள் கணிப்பீர்களோ எனக்குத் தெரியாது. சமகாலப் பிரச்சினைகளைச் சிந்திக்காமல் கவி எழுத முடியாது. கூடாது. அருவியும், குருவியும் மயிலும் மானுமே பாடற் பொருளாக நிற்க முடியாது. புதியனவும் இடம் பெறுவது காலக்கட்டாயம். 'ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை. அதனால் என் கவியை இன்னும் நான் படைக்கவில்லை’-என்று முன்பு எழுதிய நானே நிறைய ஒன்ஸைட்