பக்கம்:பூமியின் புன்னகை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பூமியின் புன்னகை

மூன்று வயதினில்
முற்றமும் வாசலும்
ஊன்றி நடந்து
உருண்டு தவழ்ந்து

பொம்மைகள் தேடினேன்
பொலிபந்துகள் ஆடினேன்
கைம்மலர் சிவக்கக்
கண்களிற் பொத்திக்

கூடம் நெடுகிலும்
ஒடிப் பிடித்தே
தேடிய சிறுவரைத்
திகைத்திடச் செய்தேன்!

பத்து வயதினில்
பாலனாய் வளர்ந்தபின்
வித்தைகள் தேடினேன்
விவேகம் தேடினேன்!

மிட்டாய் ஐஸ்கிரீம்
மிகுசுவை இனிப்புகள்
பட்டால் சொக்காய்
பலவகை உடைகள்

எதையும் தேடினேன்
எல்லாம் அணிந்தேன்
கதையும் பாடலும்
கணக்கில கற்றேன்!