பக்கம்:பூமியின் புன்னகை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்லன்


•பத்துத் தடவைகள்
வில்லன் குத்திய
வீரக் குத்துக்களில்
சற்றும் அயராச்
சரித்திர நாயகன்
சற்றே மெல்லத்
தட்டிப் பார்த்ததும்
தடால் என விழுகிற
வில்லனை இவர்கள்
எங்கேயிருந்து தேடிப் பிடித்தார்?