பக்கம்:பூமியின் புன்னகை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

61


நீர்ஐயா திருத்தவத்தீ ரிங்கிருக்கும்
நிலையறியா தேன் பிறந்தீர் இந்நாட்டில்?

நீர் பிறந்தீர் என்னுமொரு நினைப்பல்லால்
நினைப்பதற்கு வேறெதுவும் இந்நாட்டில்

ஓரணுவும் மீதமில்லை இந்நாளில்
உத்தமரே தவஞான உள்ளொளியே

வேரளவும் அழுகி விட்டோம் முழுகிவிட்டோம்
வீணர்களைப் பதவிகளில் அமரவைத்து

ஒரளவும் பயனின்றி ஒடுங்கிவிட்டோம்

ஒற்றுமையோ புரிந்துணர்வோ சிறிது மின்றி

நீரளித்த சுதந்திரமாம் நற்பொருளை
நீசருக்குப் படைத்துவிட்டோம் மகாத்மாவே!

போரெடுத்துப் பெற்றபெரும் வெற்றியினைப்
புல்லருக்கு அடகுவைத்தோம் மகாத்மாவே!

யாரெதிர்த்து வந்தாலும் வலிமையின்றி
அவர்க்கடிமை யாகிவிடும் காரணத்தால்

சீரிழந்த நாடாகித் தவிக்கின்ருேம்
தெய்வமே இங்குவந்து ஏன்பிறந்தீர்?

எல்லோரும் உடுப்பதற்குத் துணியில்லா
இந்நாட்டில் யானணிவேன் அரையாடையென்

றில்லார்க்குப் பிரதிநிதியாய் நீரிருந்தீர்
இந்நாளில் மந்திரிகள் என்றிருப்பார்,