பக்கம்:பூமியின் புன்னகை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

63


இத்தரையில் நீரிருந்தீர் என்பதனை
என்றைக்கோ மறந்துவிட்ட களிமண்ணில்

பத்தரை மாற்றுத் தங்கமே

பழுதறியாப் பெருங்கருணை வள்ளலே
எத்தனை காலமோ செய்த புண்ணியங்கள்

இருந்தாலும் ஏன்பிறந்தீர் இந்நாட்டில்?
தேசம்பெரிதென் றெண்ணியவர் அந்நாளில்

தேசத்தைக் காப்பதற்காய்த் தம்நலங்கள்
நேசமெல்லாம் தியாகமென நேர்ந்திட்டார்

நீரளித்த பிச்சையாகும் சுதந்திரத்தை
நீசமதியிலிகள் இந்நாளில் இந்நாட்டில்

நெடும்பதவி யென்னுமொரு மோகத்திற்
தேசத்தை விலைகொடுத்தும் அடைகின்றார்

தெய்வத்தை விலைபேசித் தேவைகொளும்
மோசத்தை யத்தனையும் பார்க்குங்கால்

மோகனதாஸ் காந்தியெனும் மகாநதியே!
காசைத் தொழுவதன்றி வேறறியாக்

கயவர் பெருத்துவிட்ட இந்நாட்டில்
தேசத்தைப் பக்திசெயாப் புல்லரிடைத்

தெய்வம் நீர் இங்கு வந்து ஏன்பிறந்தீர்?
நீரொருவர்பிறவாமலிருந்திருந்தால்