பக்கம்:பூமியின் புன்னகை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பூமியின் புன்னகை


இந்நிலையை நினைப்பதற்கும் புத்தியின்றி
வேறொருவர் சொன்னாலும் தெரியாமல்

விலங்குகளாய் மந்தைகளாய் வாழ்ந்திருப்போம்
பேரொளியே நினைப்பதற்குத் தூண்டிவிட்டீர்

பின்னாளில் நடப்பதெல்லாம் பார்த்தாலோ
சீரழிய வழிவகுக்கும் இந்நிலைமை

சீக்கிரமாய் வருமுன்னால் நாங்கள்
ஓரறிவும் வளராமல் போம்படியாய்

உத்தமரே நீரிங்கு பிறவாமல்
வேறெங்கோ பிறந்திருந்தால் பழியில்லை

வித்தகரே ஏன்பிறந்தீர் இந்நாட்டில்
நீர் பிறந்த காரணத்தால் சிந்திக்கும்

நிலைமையினைப் பெற்றுவிட்டோம் சிந்தித்தால்
யார்பிறந்தும் திருத்தவொணா இந்நாட்டில்

அடிகள் நீர் ஏன்பிறந்தீர்? ஏன்பிறந்தீர்?
(அக்டோபர், 1970)