பக்கம்:பூமியின் புன்னகை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பூமி சிரிக்கின்றாள்

சந்திர மண்டலத் தெல்லையிலே-மானிடர்
தனியாய் நடந்த சாதனையும்
 
எந்திர நுணுக்க இயல்புகளும்-உலகில்
எங்கும் வளர்ந்து கிளைத்திடு நல்

மந்திர ஞானப் புதுமைகளும்-இங்கு
மலைமலை யாக வளர்ந்திடினும்

இந்திர நீலம் இதழ் மலர்ந்தே-ஒர்
இங்கித மாகப் பூப்பதையே
 
சின்னக் குழந்தை சிரிப்பதுபோல்-நான்
சித்தம் கிறங்கிடப் பார்த்திருப்பேன்

வண்ணக் களஞ்சிய வகை வகையாய்ப்-புது
வனப்புக் காட்டும் நகை நகையாய்

எண்ணத் தொலையா நறுமணமாய்-ஏதும்
எழிலிற் குறையா விதவிதமாய்

அன்னை பூமி சிரிக்கின்றாள்-அவள்
அத்தனை சிரிப்பும் மலராகும்!