பக்கம்:பூமியின் புன்னகை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதியன் திரும்பிவிட்டான்


•காதுகள் இருந்தும் கேளாமல்
கண்கள் இருந்தும் பாராமல்
வீதிகள் இருந்தும் நடவாமல்
விவேகம் இருந்தும் புரியாமல்

பேதைகள் நிறைந்த பொதுவினிலே
புதியவன் ஒருவன் வந்து நின்றான்
சாதிகள் மறைந்த சமதர்மம்
சத்தியம் மிகுந்த பொதுத் தொண்டு

நீதிகள் அறிந்த பெருநெஞ்சம்
நேர்மைகள் தெரிந்த மரியாதை
வேதியர் அறியா மெய்ஞ்ஞானம்
மிகவும் மலர்ந்தே சிரித்த முகம்

யாவையும் இருந்தும் கொன்று விட்டார்
யாதும் அறியா மந்தையிலே-இப்
பூமியில் வந்தது பிழை என்றே
புதியவன் திரும்பிப் போய் விட்டான்!

பூ- 5