பக்கம்:பூமியின் புன்னகை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நீங்கள் ஆக்கிய ‘நான்’



• ஆஸ்திகர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தே
அக்கறை காட்டி என்னை நாஸ்திகன் ஆக்கினீர்!

வசதியுள்ளவர் யாவரும் ஒன்று சேர்ந்தே
வம்புக் கிழுத்து வம்புக் கிழுத்தே என்னை

வசதியற்றவர்களின் தோழனாய் ஆக்கிவிட்டீர்!
நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தே

நித்த நித்தம் முயற்சி செய்தே என்னை
நிறுவனங்களின் எதிரியாய் ஆக்கிவிட்டீர்!

பயந்தவர் எல்லாரும் ஒன்று சேர்ந்தே
பயமுறுத்திப் பயமுறுத்தி மிரட்டியதால்

என்னை நிர்ப்பயமானவன் ஆக்கிவிட்டீர்!
கட்சிகள் எதுவு மற்றிருந்த என்னைக்

கட்சிகட்டிக் கட்சி கட்டிக் கங்கணம் கட்டி
எதிர்த்தெதிர்த்தே ஒரு கட்சியாய் ஆக்கி விட்டீர்!