பக்கம்:பூமியின் புன்னகை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குப்பையும் மந்திரியும்


முதல் நாள் பேப்பரில் முதற்பக்க விளம்பரம்
தெருச்சுவர் எல்லாம் தடித்தடி எழுத்தில் போஸ்டர்

போட்டோ கிராபர் நிருபர்கள் புடை சூழ
மந்திரி ஒருநாள் தெருவைப் பெருக்கினர்

மக்களும் சேர்ந்து துடைப்பம் பிடித்தனர்
மறுநாள் காலை மக்களும் மறந்தனர்

மந்திரியும் மறந்தார் தெருவும் மறந்தது
மந்திரியோடு குப்பையும் துடைப்பமும் படத்தில்
வந்தன.

மறுபடி பெருக்க மந்திரி வரும்வரை
குப்பைகள் தெருவில் சுதந்திரமாகக் கூடின.

தெருவை விட்டுச் செல்லுவதில்லை என்றே
குப்பைகள் எல்லாம் கூடிக் கூடித்

தெருவே குப்பையாய் மூடித் திளைத்த பின்னர்
கொசுக்கள் மொய்த்தன ஈக்கள் எழுந்தன