பக்கம்:பூமியின் புன்னகை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பூமியின் புன்னகை



அழுகலும் நாற்றமும் ஆளைத் துரத்தின
பேப்பர் விளம்பரம் பெரிதாய்ப் போஸ்டர்

போட்டோகிராபர் டிவி காமிரா நிருபர்கள் சூழ
மறுபடி பெருக்க மந்திரி வரும்வரை

தெருவை விட்டுச் செல்லுவதில்லை என்றே
குப்பைகள் ஒன்றாய்க் கூடி இருந்தன

குப்பைகள் என்றால் ஒன்றும் கேவலமில்லை
குப்பைகளுக்கும் உண்டிங்கே சுயமரியாதை

குடும்பம், ஒற்றுமை குழந்தை குட்டிகள் எல்லாம்
எப்படி யாயினும் அவற்றுக்கும் உண்டுதான்,

மந்திரி வந்தால்தான் இனி அவை மதித்துப் புறப்படும்!