பக்கம்:பூமியின் புன்னகை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கள் தெருவிளக்கு


இருட்டில் எரிவதுதான் எங்கும் விளக்காகும்
இருட்டை விலக்கும் அதுவே விளக்கென்பார்
எங்கள் தெருவிளக்கோ இதற்கெல்லாம் விதிவிலக்கு
வீதி விளக்கல்ல இது வெறும் விதிவிலக்கே!

பவுர்ணமி இரவிலே பளிச்சென் றெரியும்
அமாவாசை இரவிலோ அழுது வடியும்
இருளில் இருளோடு சேர்ந்து ஒத்துழைக்கும்
ஒளியில் ஒளியோடு சேர்ந்து ஒத்துழைக்கும்

ஊருக்கதனால் வேறு வகையில் உதவிகள் உண்டு
கட்சிகள் தோரணம் கட்ட அது கம்பமாகும்
பட்டம் விடுகிற சிறுவர்கள் மஞ்சாக் கயிறு
பட்டு மாட்டி வதைத்திடும் போதில் வம்புமாகும்.

கிட்டுக் கோனார் வசமாய் எருமையைக்
கட்டிக் கறக்கையில் அதுகட்டுத் தறியாம்
பட்டப் பகலில் வீணாய்த் தெருவைச் சுற்றும்
பக்கா ரெளடி பரமசிவம் பக்குவமாகச்