பக்கம்:பூமியின் புன்னகை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கள் இந்தியா



• எங்கள் இந்தியா! ஆம்! இது எங்கள் இந்தியா
மியூஸியங்களும் மிருகக் காட்சிசாலைகளும்
மிகுந்த இந்தியா

சீர்திருத்த வாதிகள் சிலரும் செப்பிடுவித்தைக்காரர்கள்
பலரும் செறிந்த இந்தியா
தியாகிகள் சிலரும் திருடர்கள் பலரும்
நிறைந்த இந்தியா

சத்தியம் என்றொரு பொருளினை அலங்கரித்தே வெறும்
சாட்சியாய்க் கூண்டில் பூட்டி வைத்தோம்
காந்தி என்றொரு மகாத்மாவைக் காட்சிப் பொருளாய்க்
காட்டி வைத்தோம்

சுவர்களில் எல்லாம் மாட்டி வைத்தோம்
நேரு என்றொரு மானிடநேயர் தம்மை
நித்தம் பேசியே அலுத்து விட்டோம்