பக்கம்:பூமியின் புன்னகை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பூமியின் புன்னகை


மாநில வாரியாய்க் கட்சிகள் தாவும்
மாபெரும் இந்திய அரசியல் சர்க்கஸ்
புதியதோர் அற்புதம் பெரியதோர் அதிசயம்

நல்லவை எல்லாம் வெறும் காட்சிப் பொருளாய்
நடை யிழந்திருக்கத்
தீயவை எல்லாம் சேர்ந்து எழுந்தே
தெருவினில் இயங்கிப் ‘பரவும்,

படைகளாய்’ வளர்கிற பாரத தேசம்
பதவியே சுகமெனப் பரமானந்தத் திளைப்புடனிருக்கும்
பஞ்சணை வாசிகள் கொஞ்சி மகிழும் பாரததேசம்
முப்பது வருடம் சுதந்திரமாக வாழ்ந்த பின்னும்
தண்ணீர் குடிக்கத் தவிக்கும் ஏழைகள்

கண்ணிர் வடிக்கும் கவலைகொள் தேசம்
உண்ணச் சோறும் உடுக்கத் துணியுமின்றி
எல்லா நவீன வசதிகளும் இங்கு தாராளம்
விஞ்ஞான முன்னேற்றமோ மிகவும் ஏராளம்

‘சாரா ஜஹாம்ஸே அச்சா இந்துஸ்தான்’
குடிக்க நீரும் வசிக்க இடமும் தான்
குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை

கலர் டெலிவிஷன் கம்ப்யூட்டர்கள் சூப்பர் ஜெட்
விமானங்கள்
விண்வெளி ஆராய்ச்சி மண்ணடி வளம்தேடல்
எல்லாம் வளர்ந்து இன்னும் வளர்கிறோம்
எதற்கும் குறைவிலை எதற்கும் குறைவிலை