பக்கம்:பூமியின் புன்னகை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ரேட்


• ஐம்பது பைசா டீக்காசில் கூலியாள்
ஐந்து ருபாயில் கீழ்நிலை ஊழியன்
ஐம்பது ரூபாயில் அதிகார மேல்மட்டம்
ஐந்நூறு ரூபாயில் வட்டக் கவுன்ஸிலர்

ஆயிரம் ரூபாயில் தொகுதி எம். எல். ஏ.
ஐம்ப தாயிரத்தில் எம். பி. மாண்புமிகு
இலட்சம் கோடிகளில் மிகப்பெரிய முதல்மாண்பு

என்று ஏதேதோ விவரத்தைப் பைத்தியம்போல
என்நண்பன் உளறினான் செவி மடுத்தேன்
என்னப்பா இதெல்லாம் முடிவாகி அறிவித்த
ரேட்டைப் போல் டாரிஃப் கார்டா? என்றேன்

நாட்டில் பலரை ஆட்டிப் படைக்கும்
நம்பகமான 'மார்க்கெட் நிலவரம்' என்றான்
என்னப்பா அதிகம்சொல்லுகிறாய்? எனக்கேட்டேன்