பக்கம்:பூமியின் புன்னகை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

85


விலை வாசி எல்லாமே ஏறிப் போச்சு
கத்திரிக்காய் ஒருகிலோ நாலுரூபாய்
தொலைபேசி ஒருகால் ஒண்ணேகால் ரூபாய்

கட்டுபடி யாகணுமே என்றான் கவலையுடன்
கோடியும் லட்சமும் கொஞ்சமாய்ப் போனது
வாடிக்கை என்றான் வகையாக உளறினான்
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்றேன்

அதற்கும் இங்குநல்ல விலை உண்டென்றான்
இதற்குமா விலையென் றேக்கத்தோடு கேட்டேன்
இதற்கு மட்டுமென்ன எதற்குந்தான் என்றான்

வரவர நண்பன் பலபொய்களைச் சொல்வதாய்
நானே நம்பி என்னைத் தேற்றிக் கொண்டு பின்
தேறினேன் வேறென்ன செய்ய இங்கே?