பக்கம்:பூமியின் புன்னகை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

87


இன்று


ஊருணி வற்றித் துார்ந்தது வறண்டது
மரம் நடு விழாவுக்கு மறுநாள் காலை
ஆலமரத்தை யாரோ வெட்டி விறகாய் விற்றார்
மரத்தடி இருந்த மாமூல் இடத்தில்

சுமைதாங்கி இருந்தது சுமையும் இல்லை
சுமப்போரும் இல்லை கைப்பையுடன் வந்தே
கடுகி விரைந்து பஸ்ஸில் ஏறினர்
வழி நடைப் பயணம் மூட்டை முடிச்சு

பாரம் சுமப்பது எல்லாம் பழங்கதையாச்சு
களத்து மேட்டுக் கள்ளுக் கடையினில்
வாடிக்கைக் குடிகாரன் வடிவேலுக் கொத்தன்
தேடி வந்து தூங்கும் மேடையாகி

எங்கள் ஊரின் சுமைதாங்கிப் பழங்கல்
இன்று தாங்கும் சுமைகள் மூன்றே மூன்றுதான்
ஒன்று வடிவேலுக் கொத்தனின் உடம்பு
மற்றொன்று அவன் உடலுக்குள் ஒடும் சாராயம்
மூன்றாம் சுமை கவலை-சுமக்க வேறு சுமைகளே இல்லையே
என்பது!