பக்கம்:பூமியின் புன்னகை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

91


நடுவே நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்
குள்ளாகிறார்கள்
நடுவில் நிற்காதே பின்னாலும் போகாதே

முன்னேறிவிடு உன் முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன
நடுவில் நிற்காதே பின்னாலும் போகாதே

நீ நிற்குமிடம் உனக்குப் புரிகிறதா?
நடுவில் நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்
குள்ளாகிறார்கள்

முன்னேறிவிடு உன் முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன
எப்போதும் இடதுபுறமே செல்! மறக்காதே!

சாலை விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்!
சாலைகளில் நடுவே நின்று தயங்குபவர்களே
எப்போதும் விபத்துக்குள்ளாகிறார்கள்!

※※