பக்கம்:பூமியின் புன்னகை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரதமபேச்சாளரின் சிறப்புரை


மூன்று மணிநேரப் பொதுக் கூட்ட மேடை
முதலில் வரவேற்றவர் பேசிய வரவேற்புரை
நாற்பது நிமிஷம் நன்றாய் நீண்டது
மாலைபோடுவார் கைத் தறித் துணியர் எல்லாம்
கூடியாடிக் கொன்றது இருபது நிமிஷம்

எண்பது வயதுத் தலைவருக்கு வேறு மேடைகள்
இசைவாய்க் கிடைப்பது மிகவும் துர்லபமாகும்
தன்பங்குக்கு அவர் பேசிய தலைமையுரை அறுவை
சரியாய் ஒருமணிக் கூறு முழுமணி நேரம்

குட்டிப் பிரசங்கிகள் பேட்டைப் பிரமுகர்கள்
வட்டம், கோட்டம், எல்லாம் பேசக்
கெட்டது வகையாய் இருமணி நேரம்
நான்கு மணிகள் பொறுமையாய் இருந்த