பக்கம்:பூமியின் புன்னகை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தி எதிர்ப்பு வீரர்


• இந்தி அரக்கி எழுத்தெழுத்தாக
இருக்கும் இடங்களைத் தேடி அழிக்கவே
வட்டச் செயலாளர் வகையறாக் கொடுத்த
ரூபாய் நூறில் சட்டியும் தாரும்

மட்டையும் வாங்கி அழித்தது போக
மிச்சம் ரூபாய் எழுபது கிடைத்தது
கட்சித் தொண்டர் கட்டிளம் காளையர்
சிந்தனை மூளை யோசனை எதனையும்

சொந்தமாய்ச் செலவிடாது தலைவர் சொன்னதைத்
தந்தம் கடமையாய்ச் செய்துமுடிக்கும் செயல்வீரர்
நூறு மில்லியும் அவித்த முட்டையும்
வேறு வேறாக வாங்கி யுண்ட பின்

மிச்சப் பணத்தில் மேனகா தியேட்டரில்
ஏ. சி. வசதியில் இருந்து பார்த்தது
'யாதோங்கி பாராத்’ ஆகும்
இந்தி ஒலிக தமில் வால்க!

உடல் தமிலுக்கு உயிர் மண்ணுக்கு!
ஒலிக இந்தி! ஓங்குக தமிலே!
வெள்க தமிலர்! வீல்க வடவர்!